குவியும் பட வாய்ப்புகள்! மாடர்ன் உடைக்கு மாறிய ராகுல் தாத்தா
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ரவுடிதான்”. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.இப்படம் காமெடி படமாக உருவாகி இருந்தது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ராகுல் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ராஜவேல். இப்படத்தின் மூலம் பிரபலமானதால் மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது ராகுல் தாத்தா மாடர்ன் உடை மற்றும் புதிய ஹேர் ஸ்டைலில் என ஆளே மாறிவிட்டார்.இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளங்களில் பரவி வருகிறது.
இதை பார்க்கும் போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்காக இப்படி மாறி விட்டார் என்பது போல தெரிகிறது.