பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி முதலில் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் 57 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வீட்டிற்குள் வந்த உடனே அபிராமி மாறும் முகனின் காதலுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து மூன்றாவது நபராக எலிமினேட் செய்யப்பட்ட மோகன் வைத்யாவை சந்தித்துள்ளார். இவர்களது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.