மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழ் கவிதை உலகில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர்களில் சமகால கவிஞர் கவிகோ அப்துல் ரகுமான். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவாக இயக்குனர் லிங்குசாமி ஒரு கவிதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
சிவகுமார் என்பவருடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. கவிகோ அப்துல் ரகுமான் மீது அதீத அன்பு கொண்ட லிங்குசாமி இந்த போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வித்தியாசம் கிடையது. யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். 3 வரிகள் மட்டுமே கொண்ட ஹைக்கூ வகை கவிதைகள் மட்டும் அனுப்ப வேண்டும். ஒரு நபர் 2 கவிதைகள் வரை அனுப்பலாம். kavikohaikupotti@gmail.com என்கிற இணையதள முகவரிக்கு போட்டியாளர்கள் தங்கள் ஹைக்கூ கவிதைகளை அனுப்பவேண்டும்.
நடுவர்கள் இறுதி முடிவு செய்து மார்ச் மாதம் அதன் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற போட்டியாளருக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாம்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…