ப்ரோமோஷனுக்கு வராத அபர்ணதி! வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் கே.ராஜன்!

k rajan producer about aparnathi

சென்னை : இன்றயை கால சினிமாவில் தன்னுடைய படத்தினை ப்ரோமோஷன் செய்ய கூட ஒரு சில நடிகைகள் வருகை தருவதில்லை. அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றாலும் கூட அதற்கு தனியாக சம்பளம் கேட்பதாக பேசப்படுகிறது. குறிப்பாக ஜெயில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணதி தற்போது நாற்கரப்போர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த அணைத்து பிரபலங்களும் கலந்துகொண்டு இருந்தார்கள். ஆனால், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபர்ணதி நிகழ்ச்சிக்கு வரவில்லை. இவர் நிகழ்ச்சிக்கு வராததை சுட்டிக்காட்டி மேடையில் பேசிய தயாரிப்பார் சுரேஷ் காமாட்சி ப்ரோமோஷனுக்கு வருவதற்கு அபர்ணதி 3 லட்சம் பணம் கேட்டார்.

3 லட்சம் பணம் கொடுத்தால் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருவார் என்று சொன்னார். இவரை போல ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவை இல்லை அவர் இப்படி சொன்னது ரொம்பவே வேதனையாக இருக்கிறது” எனவும் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப மோசமான செயல் என நடிகை அபர்ணதியை திட்டி தீர்த்தனர்.

இந்த நிலையில், நடிகை ப்ரோமோஷனுக்கு வராதது பற்றி தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு நடிகை நடித்த படத்தை ப்ரோமோஷன் செய்ய பலரும் வருகை தந்து இருக்கிறார்கள். அதில் நான் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் எனக்கு 5 லட்சம் பணம் கொடுங்கள் என்று கேட்பது ரொம்பவே தவறு.

சொந்த படத்தை ப்ரோமோஷன் செய்ய இப்படி கேட்பது ரொம்பவே கேவலமான ஒரு விஷயம். படத்திற்காக வாங்கும் சம்பளம் போதாது வகையில் இப்படி கேட்பது மிகவும் தவறு. படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவதால் கிடைக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நம்மளுடைய பெயர் இன்னுமே வெளிய தெரியும். அதனை விட்டு விட்டு இப்படி கேவலமான செயல்களில் ஈடுபடக்கூடாது” எனவும் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay