நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தனக்கு உதவியாக காமெடி காட்சிகளில் நடிக்க வைக்க தனக்கு பிடித்தவர்களை மட்டுமே அழைத்து வாய்ப்பு கொடுப்பதாக பல பிரபலங்கள் வடிவேலுவை பற்றி குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை பற்றி பேசி இருக்கிறார்.
பேட்டியில் பேசிய நடிகை ஆர்த்தி ” வடிவேலு எவ்வளவு பெரிய சிறந்த நடிகர் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. உலகத்திற்கே அது தெரியும். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் செய்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், நான் கோவை சரளா அக்கா ஆகியோர் ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்.
அது மஞ்சு வாரியர் இல்ல! ரொமாண்டிக் போஸ்டரால் பதறிய ரசிகர்கள்!
அந்த படத்திற்காக இயக்குனர் சிம்பு தேவன் எனக்கு அழைப்பு கொடுத்து என்னை கமிட் செய்தார். நானும் அந்த படத்திற்கு தேதி எல்லாம் கொடுத்துவிட்டேன். பிறகு ஒரு முறை எனக்கு கால் வந்து இந்த தேதியை நீங்கள் வேறு படத்திற்கு கொடுங்கள் நமக்கு தேதி மாற்றி விடப்பட்டு இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், அதே தேதியில் அங்கு படப்பிடிப்பு நடந்தது. உடனடியாக நான் தொடர்பு கொண்டு என்ன ஆச்சு படப்பிடிப்பு நடந்திருக்கிறது எதற்காக சார் என்னை அழைக்கவில்லை? என்று கேட்டன்.
அதற்கு வடிவேலு சார் கோவை சரளா மற்றும் ஆர்த்தி ஆகியோரை மக்கள் பல முறை பார்த்துவிட்டார்கள் அவர்கள் வேண்டாம் என்று கூறியதாக சிம்பு தேவன் என்னிடம் தகவலை சொன்னார். இதனை கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எங்களுக்கு பதில் அந்த கதாபத்திரத்திற்கு வேறு ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடந்தது. பிறகு சில மாதங்களில் படம் அப்டியே கைவிடப்பட்டது.
அந்த படம் நின்ற பிறகு 10-ஆண்டுகள் அவர் முகத்தை கூட நாங்கள்பார்க்கவில்லை. எப்போதுமே அவரை நம்பி இருப்பவர்களுக்கு மட்டும் தான் வடிவேலு வாய்ப்பு கொடுப்பார். அதுவும் அவருடைய மனதிற்கு பிடித்தது போல யார் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பார். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனவும் ஆர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…