Aarthi : சினிமாத் துறையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்குமே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசை தான். ஆனால், அவர்களில் சிலருக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பது உண்டு. அப்படி தான் நடிகை ஆர்த்தியும் கூட. ஆர்த்தி சிறிய வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர்.
ஆனால், தொடர்ச்சியாக அவருக்கு படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தால் அந்த படங்களிலே தொடர்ச்சியாக நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தி தனது சிறிய வயதிலேயே நடிக்க வாய்ப்பு கேட்டு இயக்குனர் பாக்யராஜிடம் சென்ற தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆர்த்தி ” நான் 12 வகுப்பு படித்து முடித்த பிறகு ஹீரோயினாக வேண்டும் என்று சினிமாவில் எனக்கு ஆர்வம் வந்தது. எனவே என்னுடைய உடல் எடையை எல்லாம் கடினமாக உழைத்து சாப்பிடாமல் இருந்து உடம்பை குறைத்து சற்று அழகாக இயக்குனர் பாக்யராஜ் ஜிடம் சென்றேன். சென்றுவிட்டு நான் 12 முடித்திருக்கிறேன் எனக்கு பட வாய்ப்புகள் கொடுங்கள் என்று கேட்டேன்.
அதற்கு பாக்யராஜ் சார் உனக்கு இன்னும் வயது இருக்கிறது. முதலில் படித்து முடி படித்து முடித்த பிறகு உனக்கு பட வாய்ப்புகள் வரும் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று அட்வைஸ் செய்தார். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது அவர் அப்படி சொன்னது சற்று வேதனையாக இருந்தது. இருப்பினும் அவர் நல்லதுக்கு தான் சொன்னார் என்பதை புரிந்துகொண்டேன்” எனவும் நடிகை ஆர்த்தி தெரிவித்தள்ளார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் மேலும், ஆர்த்தி தனது சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…