நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஆரவ், அவரது டிக் டிக் டிக் (2018) படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார். ஜெயம் ரவியும் அவருடைய மனைவியும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தனர்.
பேட்டியில் பேசிய ஜெயம் ரவி மனைவி ” என்னுடைய கணவர் மிகவும் எதார்த்தமானவர. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வாராது. அப்படி சண்டை வந்தாலும் அது என்னால் தான் வரும். அவர் என்னுடன் சண்டைபோட்டால் சில மணி நேரங்களில் பேசி விடுவார்.
ஆனால், நான் அப்படி இல்லை. ஒரு சின்ன சண்டை வந்தால் கூட அதை ஒரு வாரத்திற்கு மேல் கொண்டு போய்விடுவேன். அவரால் அடிக்கடி சண்டை வராது. ரவி சண்டைபோடுவதற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவர் மிகவும் அமைதியான மனிதர்” என கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் ஜெயம் ரவி ” பொதுவாகவே நமது மீது தப்பு இல்லை தப்பு பண்ணலானா கூட நாம தான் மனைவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுதான் உண்மையான காதல். நான் ஏதேனும் தப்பு செய்தால் என்னுடைய மனைவி ஆர்த்தி சரியாக 5 நிமிடத்தில் கண்டு பிடித்துவிடுவார். எனவே 5 நிமிடத்திற்காக நாம் என் பொய் சொல்லவேண்டும்.
நான் உடனே எது செய்தாலும் ஆர்த்தியிடம் கூறிவிடுவேன். என்னுடைய நண்பர்கள் உடன் தான் கோவாவிற்கு செல்வேன் அதற்கு எல்லாம் திட்டமாட்டாங்க. என்னுடைய மனைவி அதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறார். அந்த நேரத்திற்குள் நான் சென்றுவிட்டு வந்துவிடனும். நான் அதனை இப்போது சரியாக செய்துகொண்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…