vaadivasal [File Image]
நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ‘வாடிவாசல்’ இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி சில ஆண்டுகளே ஆகிவிட்ட நிலையில் இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமலே இருக்கிறது.
அதற்கு காரணம் வெற்றிமாறன் மற்றும் சூர்யா தாங்கள் இருவருமே கமிட்டாகி உள்ள படங்களை முடிக்காமல் இருக்கிறார்கள். இருவரும் தாங்கள் கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வாடிவாசல் படத்தில் நடிகர் அமீர் நடிப்பதாக முன்னதாகவே ஒரு தகவல் பரவி வந்த நிலையில் , அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றிமாறன் படத்தில் அமீர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அமீர் இயக்கும் ‘மாயவளை’படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அதில் சிறப்பு கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடிக்கிறார். வடசென்னை படத்தில் அவருடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருந்ததோ அதேபோலவே இந்த வாடிவாசல் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் இருக்கும் எனக் கூறியுள்ளார். எனவே, அவர் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா மாடு மற்றும் மாடு பிடி வீரர்களுடன் களத்தில் இறங்கி நடித்து காட்டினார். அதற்கான சிறிய வீடியோ ஒன்றையும் படக்குழு முன்னதாகவே வெளியாகி இருந்தது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…