வெல்லுவான் புகழ் அள்ளுவான்…அகிலமெங்கும் ‘1000’ திரையரங்கில் வெளியாகும் ‘ஆளவந்தான்’.!
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னதாக வெளியான படங்கள் புதிய டிஜிட்டல் ஒளி அமைப்பில் ரீ கிரியேட் செய்து ரீ-ரீலிஸ் செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி நடித்த பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான “ஆளவந்தான்” திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.
Aalavandhaan is coming soon pic.twitter.com/yO1VA6UznQ
— sureshkrissna (@Suresh_Krissna) January 25, 2023
புதிய டிஜிட்டல் ஒளி செய்யப்பட்டு படம் கிட்டத்தட்ட அகிலமெங்கும் ‘1000’ திரையரங்கில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- தனுஷோட அந்த பிளாக் பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்…வருத்தப்பட்ட நடிகர் பரத்.!
மேலும், விரைவில் “ஆளவந்தான்” திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.