Aadhavan [File Image]
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ படம் வெளியாகி 14-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஆதவன்
கமர்ஷியல் படங்களை இயக்கி ஹிட் கொடுப்பதில் பெயர் போன இயக்குனர் என்றால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என்று கூறலாம். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் என்றால் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘ஆதவன்’ திரைப்படம் என்று சொல்லலாம். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே கூறலாம். அதைப்போல, படத்தில் வரும் காமெடி காட்சிகளும் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்றே சொல்லலாம். படத்தின் காமெடி காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே சொல்லவேண்டும்.
14 ஆண்டுகள்
ஆதவன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், படம் இதே தினத்தில் (அக்17) கடந்த 2009-ஆம் ஆண்டு தான் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 14-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே , படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை வைத்து எடிட் செய்து நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
பட்ஜெட் மற்றும் வசூல்
25-கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 59 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் 31 கோடி வசூலும், ஆந்திரா & நிஜாம் ஆகிய பகுதிகளில் 10 கோடி, கர்நாடகாவில் 1.65 கோடி, கேரளாவில் 2.5 கோடி, வெளிநாடுகளில் 13 கோடி என மொத்தமாக இந்த திரைப்படம் 59 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக மாறியது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…