புஷ்பாவை கண்டு ஒதுங்கி நிற்கும் காட்டு புலி.! அனல் பறக்கும் புதிய வீடியோ இதோ…
புஷ்பா-2 திரைப்படத்தின் 3 நிமிட அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பஹத் பாசில், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.
புஷ்பா படத்தின் வெற்றியை போல இரண்டாவது பாகத்தையும் வெற்றியுடன், சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தற்போது தீவிரமாக வேலை செய்துவருகிறார்கள். எனவே படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் அருமையாக எடுத்து வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாளை அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று புஷ்பா-2 திரைப்படத்தின் 3 நிமிட டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாக டீசரில், போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான புஷ்பாவை (அல்லு அர்ஜுன்) தேடும் போது ஊர் முழுவதும் கலவரம் வெடிக்கிறது.
போலீசே புஷ்பாவை சுட்டுக்கொன்று விட்டு நாடகம் நடத்துகிறதா என்று மக்கள் அச்சப்படும் நேரத்தில், காட்டில் புலிக்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், புஷ்பா உயிரோடு இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் புஷ்பா வருவதைக்கண்டு, காட்டுப் புலி அஞ்சி வழி விடுவது போல் படு மாஸாக இந்த டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
The #HuntForPushpa ends and ????????????????????????’???? ???????????????? ???????????????????????? ????
Happy Birthday to Icon Star @alluarjun ???? #HappyBirthdayAlluArjun #WhereIsPushpa? #Pushpa2TheRule @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/fynxRaCCwy
— Pushpa (@PushpaMovie) April 7, 2023
>