குட் பேட் அக்லி நான் எடுத்தா இவுங்களுக்கு இந்த ரோல் தான்! வெங்கட் பிரபு ஓபன் டாக்!
Good Bad Ugly கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படம் . குறிப்பாக சினிமா துறையில் இருக்கும் இயக்குனர்களுக்கு பிடித்த படம் என்று கூட கூறலாம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது தங்கப் புதையலைத் தேடிச் செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு தான் நடிகர் அஜித்தின் 63-வது திரைப்படத்திற்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கவுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
படத்தின் தலைப்பை பார்த்தவுடனே இது எப்படி பட்ட படமாக இருக்க போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த ஹாலிவுட் படங்களை பற்றி சில இயக்குனர்கள் பேசும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு அந்த படம் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
read more- பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன கிரண்!
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம் நீங்கள் தமிழில் குட் பேட் அக்லி படம் எடுத்தால் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைப்பீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ” குட் -விஜய், பேட் -அஜித் – அக்லி பிரேம் ஜி” என கூறினார். மேலும், தற்போது வெங்கட் பிரபு விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.