இது..ஹீரோ சோபா! இயக்குனர் சோபா! ‘LIC ‘ படக்குழுவினரை கலாய்த்த Viral Sofa Boy!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தன் சோபா வியாபாரம் குறித்து பேசியதன் மூலம் மிகவும் ட்ரென்டிங் ஆன சிறுவன் முகமது ரசூல். சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில் தன்னுடைய சோபா வியாபாரம் குறித்து வீடியோ வெளியிட்டதற்கு பெரும் விமர்சனங்கள் எழுந்தது.
ஒரு பக்கம் இந்த வயதிலே இவருடைய தொழில் ஆர்வம் பேசும் ஆர்வம் பற்றி பாராட்டி வந்தாலும் மற்றோரு பக்கம் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் தொடர்ச்சியாக தன்னுடைய கடையை விளம்பர படுத்த சிறுவன் முகமது ரசூல் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். இவருக்கு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது.
அந்த வகையில், சிறுவன் முகமது ரசூல் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் LICதிரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
நீங்க ஹீரோவா நடிச்சா நாங்கெல்லாம் என்ன பண்றது? சூரி குறித்து விஸ்ணு விஷால்!
இந்நிலையில், படப்பிடிப்பில் சிறுவன் முகமது ரசூல் தனது பணியில் படக்குழுவினரை கலாய்த்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் விக்னேஷ் சிவன் நீ சோபாவை விற்பனை செய்வது போல எங்களை விற்று காட்டு என்று கூறுகிறார்.
அதற்கு உடனடியாக முகமது ரசூல் தனது பாணியில் இன்னைக்கு நாம எங்க இருக்கோம்னு பாத்தீங்கன்னா படப்பிடிப்பில் இருக்கிறோம். இந்த படத்தை விக்னேஷ் அண்ணன் எடுக்கிறார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். விக்னேஷ் அண்ணன் மிகவும் நல்ல மனிதர் அவர் எனக்கு ஒரு சேலஞ் கொடுத்திருக்கிறார். இங்கு இருக்கும் அனைவரையும் விற்றுகாட்ட வேண்டும் என்று.
இந்த சோபா இயக்குனர் சோபா என்று விக்னேஷ் சிவனை காட்டினார். பின் கேமரா சோபா என்று ரவி வர்மனை காட்டினார். ஹீரோ சோபா என்று பிரதீப் ரங்கநாதனை காட்டி தனது பாணியில் இந்த சோபா எல்லாம் LIC படத்தில் இருக்கிறது கண்டிப்பாக வந்து பாருங்கள் என ப்ரோமோஷனும் செய்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்களுக்கு சிரித்துக்கொண்டு முகமது ரசூல் பேசுவதை ரசித்தனர்.
View this post on Instagram