நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்களின் பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் இருக்கும் என்றே கூறலாம். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.
மேலும், சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
நிறைய பேர் கூட உறவில் இருந்தேன்! அதிர வைத்த அருவி பட நடிகை!
திரையரங்குகளில் வெளியாகவிருந்த கொரோனா பரவல் சமயத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த படம் பெரிய அளவில் விமர்சனத்தை பெற்று ஹிட் ஆனது. மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விரைவில் உருவாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகியும்விட்டது.
இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிரமான பாக்சிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், நடிகர் ஆர்யா சென்னை எம்.எம்.ஏ பயிற்சி வகுப்பிற்கு சென்று அங்கு பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான விடியோவையும், ஆர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…