பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயணின் மகனும் பாடகருமான ஆதித்ய நாராயண் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சில பாடல்களை பாடி இருக்கிறார். பாடல்களை பாடியது மட்டுமின்றி பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள ருங்டா கல்லூரியில் கச்சேரியின் போது ஆதித்ய நாராயண் ஒரு ரசிகரை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்துள்ளது. ஆதித்ய நாராயண் சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள ஒரு கல்லுரியில் இசை கச்சேரி நடத்துகிறார் என்றதை தெரிந்தவுடன் பல ரசிகர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.
பாலிவுட் அழகி மிருணால் தாக்கூருக்கு கோலிவுட்டில் பம்பர் வாய்ப்பு!
அப்போது ஆதித்ய நாராயண் ஷாருக்கானின் ‘டான்’ பாடலிலிருந்து பாடகர் ‘ஆஜ் கி ராத்’ பாடலை பாடி கொண்டு இருந்தார். அந்த சமயம் கீழே இருந்த ரசிகர்கள் சில தங்களுடைய போனை கொடுத்து போட்டோ எடுத்து தரும்படி கேட்டு கொண்டு இருந்தார்கள். அதனை பார்த்த ஆதித்ய நாராயண் மிகவும் கடுப்பாகி போனை வாங்கி கொண்டு கூட்டத்திற்குள் வேகமாக வீசினார்.
பிறகு பாடலை பாட தொடங்கினார். மீண்டும் மற்றோரு ரசிகர் கீழே தனது போனை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொடுக்க கூறியுள்ளார். மீண்டும் கடுப்பான ஆதித்ய நாராயண் அந்த ரசிகரின் போனை வாங்கும்போது தனது மைக்கை வைத்து அவருடைய கையில் தாக்கிவிட்டு போனை தூக்கி வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் ரசிகர்களிடம் இப்படியா நடந்து கொள்வீர்கள்? எனவும் நீங்கள் நடந்து கொள்வது மிகவும் தவறு எனவும் கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…