அஜித்குமார் : அஜித் ரசிகர்கள் பலரும் அவர் நடிக்கும் படங்களில் இருந்து எதாவது அப்டேட் வருமா என காத்திருக்கும் நிலையில், அவர் பைக் மற்றும் கார்கள் ஓட்டும் வீடியோக்கள் தான் வெளியாகி கொண்டு இருக்கிறது. பைக் மற்றும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ள அஜித் அடிக்கடி பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
பைக்கை தொடர்ந்து கார்களை ஒட்டி பார்த்தும் தனது நேரத்தை கழித்துவருகிறார். அந்த வகையில், ஏற்கனவே, துபாய் சென்ற நடிகர் அஜித் அங்கு ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் என்ற காரை ஓட்டி பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
அதனை தொடர்ந்து, ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் காரை அஜித் ஒட்டிய வீடியோ ஒன்றும் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் மிரண்டு போய் எப்பா என்னா ஸ்பீடு எனவும், மின்னல் வேகத்தில் பறக்கும் தல எனவும் கூறி வருகிறார்கள்.
மேலும், நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, இந்த படத்தை தவிர்த்து இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…