கோட் படத்திற்கு U/A சான்றிதழ்! கடைசி காட்சியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?
சென்னை : கோட் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கடைசி காட்சியில் சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோட் படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமாவில் வெளியான ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
சென்சாரில் படத்தினை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். எனவே, குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்று படத்தைப் பார்த்து மகிழலாம். படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதை போஸ்டர் ஒன்றை வெளியீட்டுப் படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலான போஸ் கொடுத்திருப்பதைக் காணலாம்.
ரன்டைம் எவ்வளவு?
கோட் படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், படம் மொத்தமாக எத்தனை மணி நேரம் படம் ஓடும் என்பதற்கான ரன்னிங் டைம் பற்றிய தகவலும் கிடைத்திருக்கிறது. அதன்படி, படம் 2.55 நிமிடங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதில் கடைசி 3.5 நிமிடம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ‘BTS’ (மேக்கிங்) வீடியோ வரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோட் படம் மட்டுமில்லை, வழக்கமாகவே வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்த பிறகு டைட்டில் கார்ட் வரும்போது படத்தின் படப்பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைக் கொண்ட வீடியோ வரும். அது கோட் படத்திலும் இருக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கோட் படத்தின் இறுதி காட்சியில் அந்த சர்ப்ரைஸை வெங்கட் பிரபு வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.