கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் விஷால் பேசியதாவது ” விஜயகாந்த் அண்ணன் இறந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு செய்தியை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. உங்களை கடைசியாக ஒரு முறை பார்க்க வராததற்கு வருந்துகிறேன்.
விஜயகாந்த் மறைவு…சினிமா பிரபலங்கள் இரங்கல்!
இந்த நேரத்தில் நான் அங்கு இருந்திருக்கவேண்டும். முதலில் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா இந்த நேரத்தில் நான் அங்கு இருந்து உங்களுடைய முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் பாதத்தை தொட்டு வணங்கவேண்டும். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நான் நல்ல விஷயங்களை உங்களை பார்த்து தான் கத்துக்கிட்டேன் அண்ணா…நீங்கள் இறந்த செய்தியை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
கண்டிப்பாக உங்களை போலவே மேற்கொண்டு பல நல்ல உதவிகளை செய்வேன். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” என கண்ணீர் மல்க தனது இரங்கலை விஷால் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கு நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை கழகமான கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…