இன்று மாலை 7.30 மணிக்கு தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!
தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸின் லோகோவைக் கொண்ட ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது, இன்று மாலை 7.30 மணி ஒரு புதிய அப்டேட் ஒன்ற வெளியாக இருப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
— Dhanush (@dhanushkraja) April 9, 2023
வுண்டர்பார் பிலிம்ஸ் 2010-ல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த பேனரின் ஆதரவுடன் 2012-ல் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் மெகா ஹிட் ஆனது.
இதனை தொடர்ந்து, வட சென்னை, காலா, பா பாண்டி, நானும் ரவுடி தான் மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களை தயாரித்த வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், கடந்த நான்கு வருடங்கள் எந்தப் படத்தையும் தயாரிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
தற்போது, இந்நிறுவனம் மீண்டும் துஷி தட்டப்பட்டு புது படத்தை தயாரிக்க உள்ளதா? இல்லையா என்று இன்று மாலை அறிவிப்பு வெளியான பின்பே தெரியவரும், பொறுத்திருந்து பார்க்கலாம்.