ஐயோ…நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து.!
சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கரகாட்டக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் 80’ஸ் காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்தவர் நடிகை கனகா. இவர் தங்கமான ராசா, கோயில் காளை,உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இப்படி அந்த காலத்தில் கலக்கி வந்த நடிகை கனகா பட வாய்ப்புகள் வராத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு கீழே விழுந்து தீ பிடிக்க தொடங்கி அந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் பதட்டமான நடிகை கனகா வீட்டில் இருந்து அலறி அடித்து வெளியேறியுள்ளார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.ஆனால் வீட்டிலுள்ள துணிமணிகள் அத்தனையும் எரிந்து நாசம் ஆகிவிட்டதாம். திடீரென கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.