ராசியில்லாத ஹீரோயினா? ட்ரோல்களுக்கு பதிலடி கொடுப்பாரா பிரியா பவானி சங்கர்!!

Priya Bhavani Shankar

பிரியா பவானி சங்கர் : சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகி தற்போது பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவருக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் திருச்சிற்றம்பலம், யானை ஆகிய படங்களை சொல்லலாம்.  ஆனால், அதன் பிறகு அவருடைய நடிப்பில்  வெளியான படங்கள் எதுவுமே பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ருத்ரன், அகிலன், பீமா, ரத்தினம், இந்தியன் 2, ஆகிய படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இதில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானபோதிலும் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை.

இந்த படம் சரியாக ஓடவில்லை என்ற காரணத்தால் நடிகை பிரியா பவானி சங்கர் ராசியில்லாத ஹீரோயின் அவர் சமீப காளங்களில் நடித்த படங்கள் எல்லாம் படுதோல்வி என்று விமர்சித்து வருகிறார்கள். அவர் நடித்ததால் தான் படம் தோல்வி என்பது போலவே, பலரும் பிரியா பவானி சங்கரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரியா பவானி சங்கர் நல்ல படம் ஒன்றில் நடித்து கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். பிரியா பவானி சங்கர் தற்போது டிமாண்டி காலனி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar [file image]
இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாகத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பெரிய அளவில் பேசப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்