பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்

Thalapathy Vijay

ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சுனு விஜய் சொன்ன குட்டி கதையை கேட்டு மொத்த அரங்கமே அலறியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். அந்த வகையில், படம் வெளியான 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா நேற்று இரவு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே அனுமதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விழாவிற்கு நடிகர் விஜய்யும் வருகை தந்து குட்டி கதையை கூறுவார் எனவும் முன்னதாகவே படக்குழு பச்சை கொடி காட்டியது. அதன்படி, விஜயின் குட்டி கதைக்காக்கவும், அவர் பேசும் மற்ற சூசக பதில்களுக்காகவும் காத்திருந்தனர்.

வழக்கமாக  படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜய் குட்டி கதை கூறுவார். ஆனால், லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் இந்த லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு விஜய் குட்டிக்கதை சொல்லி அரங்கத்தை தெறிக்க விட்டார்.

குட்டி கதை

ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருவர் ஈட்டியோட சென்று யானைக்கு குறி வச்சாரு..ஆனால் இறுதியில்  ஒன்னும் இல்லாம வந்தாரு.

இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள், எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க என்று கூறி, பெரிய இலக்கை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தல்.! ‘கப்பு முக்கியம் பிகிலு’ – விஜய் சூசக பதில்.!

மேலும், ஒரு சின்ன பையன் ஆசையா அவங்க அப்பா சட்டை, அப்பாவோட வாட்ச் எடுத்து மாட்டிக்குவான். அப்பாவோட நாற்காலியில் ஏறி உட்கார்ந்துக்குவான், ஆனா அந்த சட்டை அவனுக்கு சரியா  இருக்காது, தொள தொளனு இருக்கும்.

போஸ்டர் அடி அண்ணன் ரெடி! ‘லியோ’ வெற்றி விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!

அது மாதிரி வாட்ச் கையிலயே நிக்காது. அது மட்டும் இல்ல… அந்த நாற்காலியில் உட்காரலாமா வேண்டாமா? தகுதி இருக்கா? இல்லயா? என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. இது நம்ம அப்பா சட்டை, அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு? அதனால, பெரியதாக கனவு காணலாம் ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது என்று குட்டிக் கதை சொல்லிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்