கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள குறும்படம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இதனையடுத்து, வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையிலும், சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்த வண்ணமே குறும்படம் ஒன்றினை தயாரித்துள்ளனர்.
அந்த குறும்படத்தில், நடிகர்கள், அமிர்தமாய் பச்சன், சிரஞ்சீவி, ரஜினி, மோகான்லால், மம்முட்டி, ரன்வீர் கபூர், நடிகைகள் சோனாலி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மக்கள் அவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்குமாறு இந்த குறும்படத்தில் தெரிவித்துள்ளனர்.