விஜய்யின் உத்தரவை தாண்டி கொண்டாட்டம்.. சிறுவனின் கைகளில் தீப்பிடித்த அதிர்ச்சிக் காட்சி.!

சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதனிடையே, நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறினார்.
அதற்கு பதிலாக, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாடுவதைத் தவிர்க்கவும் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், விஜய்யின் உத்தரவை தாண்டி, நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி, நடந்த சாகச நிகழ்ச்சியில் சிறுவனின் கையில் தீ பற்றி ஏறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் மாவட்ட தலைவரின் ஏற்பாட்டில் நீலாங்கரையில் நடந்த இவ்விழாவில், கையில் தீயுடன் சிறுவன் சாகசம் செய்ய இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்தவரின் கையில் இருந்த பெட்ரோல் சிந்தி சிறுவன் மீது தீ பரவியது. இதில், சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
அவரை காப்பாற்ற வந்தவர் கையில் மண்ணெண்ணெய் வைத்திருந்தால் அது எதிர்பாராதவிதமாக தீயில் பட்டு பெரிதும் பரவியது, இதனால் காப்பாற்ற வந்தவர் மீதும் தீ பரவியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்.. சிறுவன் கையில் தீ – அதிர்ச்சி காட்சி
???????????? pic.twitter.com/FA6z8cMBhn— MrTamizh – தமிழ் (@Its_MrTamizh) June 22, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025