உதடு வீங்கி…குண்டா இருக்கேன்னு..! உருவ கேலி, கிண்டல்.! ரேஷ்மா கொடுத்த பதிலடி…

Reshma Pasupuleti

பாக்கியலட்சுமி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மா, சமீபத்தில் தன்னை பாடி ஷேமிங் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு நேர்காணலில் நேரலையில் பெசியிருந்தார். அதாவது, சின்னத்திரை நடிகை ரேஷ்மா அண்மையில் தன் உடல் பருமன் காரணமாக கடுமையான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டார்.

[Image Source : Twitter/@Reshma Pasupuleti]

இந்நிலையில், தன்னை பாடி ஷேமிங் செய்த நெட்டிசன்களை கண்டித்து பேசுகையில், அடுத்தவங்க உடல் மாற்றம் மற்றும் உடைகள் பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை….அது அவங்களோட விருப்பம் என்று கூறினார்.

Reshma Pasupuleti
[Image Source : Twitter/@Reshma Pasupuleti]

எல்லா நபர்களும் தங்கள் வார்த்தைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவும், நல்லதை மட்டுமே பேசவும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒருவரின் உடலை பற்றி பேசுவதற்கு முன், அவருக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.

Reshma Pasupuleti
[Image Source : Twitter/@Reshma Pasupuleti]

எனக்கு என்ன பிரச்சனைனு தெரியாமல், நீங்கள் என்ன பத்தி ஏன் இப்படி குண்டா ஆகிட்ட அப்புடி இப்படி-னு கேள்வி கேக்கறீங்க… அது மட்டும் இல்ல என்னோட உதடுக்கு சர்ஜரி பண்ணீங்களானு கேக்கறீங்க. எனக்கு தைய்ராடு பிரச்சனை இருந்தது அதற்கு நான் டீர்ட்மென்ட் எடுத்தேன். நீங்க எனக்கு பிரச்சனைனு தெரியாமல் தயவு செஞ்சு வார்த்தைகளை விடாதீங்க என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்