ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர் ஆணையம் உத்தரவு.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசைக்கச்சேரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல மக்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க நேரில் வருகை தர முன் பதிவு செய்து டிக்கெட்கள் எடுத்தனர். ஆனால், அன்றய தினம் கனமழை பெய்து வந்த காரணத்தால் அன்று இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை.

அடுத்ததாக, நவம்பர் 8 ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சியே பெரிய சர்ச்சையாக மாறியது என்றே சொல்லலாம். குறிப்பாக டிக்கெட்டுக்கு ஏற்றபடி இருக்கைகள் போடவில்லை. எனவே, டிக்கெட் போட்டவர்கள் பலருக்குமே இருக்கைகள் கிடைக்கவில்லை. இதனால் நிகழ்ச்சியை பார்க்காமல் பலரும் வீடு திரும்பினார்கள்.

இதன் காரணமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாத ஏ சி டி சி நிறுவனதின் மீது பெரிய அளவில் விமர்சனங்களும் வைக்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியே பெரிய சர்ச்சையாகவும் மாறியது. இதன் பிறகு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை பார்த்தபார்க்காக வந்துவிட்டு பார்க்காமல் சென்ற 4000 பேருக்கு டிக்கெட் பணத்தை திரும்ப வழங்கினார்.

இருப்பினும், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியை நடத்திய ஏ சி டி சி நிறுவனம் மீது புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் குடும்பத்துடன் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றும் தங்களால் நிகழ்ச்சியை காண முடியவில்லை டிக்கெட் தொகை ரூபாய் ரூ.12,000, இழப்பீடு ரூ.50,000, மற்றும் வந்து சென்ற செலவுக் தொகை ரூ.5,000 என மொத்தமாக ரூ.67,000 வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த குறைதீர் ஆணையம், டிக்கெட் தொகையுடன் சேர்த்து மொத்தமாக அஸ்வின் மணிகண்டனுக்கு ரூ 67,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்