தற்கொலை செய்ய எண்ணம் வந்தது! ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அயலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாளை ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது ஒரு முறை தனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்ததாக அதிர்ச்சியாக தகவல் ஒன்றை கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடி நீக்கம்.!
இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ” எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய தாயார் என்னிடம் ஒன்று கூறினார். அது என்னவென்றால், “நீ மற்றவர்களுக்காக வாழும்போது உனக்கு இது போன்ற எண்ணங்கள் தோன்றாது” என என்னிடம் கூறினார். என்னுடைய தாயார் சொன்னதில் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது, சுயநலமாக இருக்க மாட்டீர்கள்.
ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம், உணவு வாங்கி கொடுக்கலாம், அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம். இதுபோன்ற விஷயங்கள்தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்” எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ராஹ்மான் அயலான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக ஆடுஜீவிதம், லால் சலாம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025