சினிமாவுக்கு பை சொல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்? சூர்யா 45-யில் இளம் இசையமைப்பாளருக்கு வாய்ப்பு!
சூர்யா 45 படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காலங்கள் கடந்தும் தன்னுடைய பாடல்களை இன்றயை கால தலைமுறைஈனருக்கும் முணு முணுக்க வைத்து வருகிறார். குறிப்பாக ராயன் படத்தில் அவர் பாடியே உசுரே உசுரே என்ற வரிகள் இன்னும் வரை நம்மளுடைய மனதிற்கு ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த சுழலில், அவருடைய அடுத்த ஆல்பங்களை கேட்பதற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துள்ள நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவை விட்டு தற்காலிமாக விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை பார்த்த பலரும் அட கடவுளே இந்த வருடம் இசை புயல் பாடலை நாம் கேட்க முடியாதோ என அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் அவர் இந்த ஆண்டு சினிமாவில் இருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் கூட அவர் இசையமைக்க கமிட் ஆகி இருந்த சூர்யாவின் 45-வது படத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வந்தது.
எனவே, இதன் மூலம் உண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகுவது உறுதி தான் எனவும் தெரியவந்தது. அவர் சூர்யா 45 படத்தில் இருந்து விலகிய நிலையில் , இளம் இசையமைப்பாளர் ஒருவருக்கும் அந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை கட்சி சேர, ஆசைகூட ஆகிய ஆல்பம் பாடல்களை வெளிட்யிட்டு ட்ரெண்டிங் ஆன சாய் அபியங்கர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய் அபியங்கர் இந்த படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் பென்ஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அந்த படத்தை தொடர்ந்து இரண்டாவதாக சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.