விஜய் பிறந்தநாளுக்கு தரமான ட்ரீட்! ‘கோட்’ படத்தின் அப்டேட் விட்ட படக்குழு!!
கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரேம் ஜி, சினேகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை ஏஜிஎஸ் எண்டெய்ர்மென்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே, படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாள் என்பதால் படத்தில் இருந்து எதாவது அப்டேட் வெளியாகுமா? என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தார்கள். காத்திருந்த ரசிகர்களை மகிழ் விக்கும் வகையில் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், கோட் படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் தனது குரலில் பாடி இருப்பதாகவும், இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
Oru chinna treat ♥️#TheGoatSecondSingle #ChinnaChinnaKangal is releasing tomorrow at 6 PM 🫶🏻
Yes!! Indha paadalai paadiyavar…@actorvijay SirA @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh
@agsentertainment#GOAT @thisisysr… pic.twitter.com/ECXl5WNlEn
— venkat prabhu (@vp_offl) June 21, 2024
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பாடல் மெலடி பாடல் என்பதால் பாடல் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. மேலும், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.