சூர்யா : சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் நடித்து வரும் படங்கள் அப்டேட் அல்லது அவர்கள் முன்னதாக நடித்த படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக இருக்கவேண்டும் என்பதால் அவருடைய ஹிட் படம் ஒன்று ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
அது என்ன படம் என்றால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான வேல் படம் தான். இந்த படம் சூர்யாவின் சினிமா கேரியரில் ஒரு முக்கியமான திரைப்படம் என்றால் இந்த படத்தினை சொல்லலாம். எனவே, சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
சூர்யா வரும் ஜூலை 23-ஆம் தேதி தன்னுடைய 48-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அதற்கு முன்னதாக அதாவது ஜூலை 19-ஆம் தேதி வேல் படத்தினை படத்தின் தயாரிப்பாளர் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம். எனவே, சூர்யா பிறந்த நாளுடன், படத்தினை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மேலும், சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…