மதுரை மாவட்ட தளபதி ரசிகர்கள் ‘நாளைய முதல்வர் நீயே’ என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது என்றே கூறலாம். அண்மையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார்.
இதை வைத்து பார்க்கும்பொழுது, வரும் காலங்களில் அவர் தேர்தலிலேயே களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக சில இணையதள நெட்டிசன்கள், சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஏனெனில், அந்த அளவுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிய கூட்டத்தில், காமராஜர், பெரியார், அம்பத்கர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி படிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோர்களிடம் கூறுங்கள் என பேசி அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த வகையில், அடிக்கடி விஜய்யின் ரசிகர்கள் பரபரப்பான போஸ்டர்களை தெருவோரமாக ஓட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார்கள். வழக்கம் போல் தற்பொழுதும் மதுரை மாவட்ட தளபதியின் ரசிகர்கள் ஒரு போஸ்டரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் மற்றும் காமராஜர் நடுவே விஜய் நிற்கிறார்.
மேலும் அதில், தம்பி பொறுத்தது போதும் வா… தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க! நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது. “நாளைய முதல்வர் நீயே” என்று வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பலமுறை மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கி வருகிறார். இருந்தாலும், விஜய் ரசிகர்கள் தங்களது மன்றத்தின் பெயர்களை குறிப்பிடாமல், போஸ்டரை அடித்த ஒட்டி வருகின்றனர்.
லியோ – தளபதி 68
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்பம் லியோ. இந்த திரைப்படம் வருகின்ற 19ம் தேதி வெளியாக உள்ளது, இதனை தொடந்து விஜய் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இசை வெளியீட்டு விழா ரத்து
கடந்த செப்., 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு அதிக அளவில் ‘டிமாண்ட்’ இருந்த காரணத்தாலும், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், ரசிகர்கள் நலன் கருதி இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என்றும், இதில் எந்தவித அரசியல் தலையீடோ மற்ற தலையீடுகள் எதுவுமில்லை என விளக்கம் அளித்தது.
இசை வெளியீட்டு விழா ரத்தான விவகாரம்
இருந்தாலும், லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் முன்பாகவே தெரிவித்திருந்தது விஜய் ரசிகர்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்… அவர் இது குறித்து தனியார் ஊடக சேனல் ஒன்றில் பேசுகையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காது என்றும், திரையரங்கு பங்கீடுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனை வைத்து விஜய் ரசிகர்களும் இது தான் காரணமா என புலம்பி கொண்டிருந்தனர்.
மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம்
சமீப நாட்களாக, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடர்ந்து பல்வேறு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் (ஆகஸ்ட் 26 ம் தேதி) மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது
இதனையடுத்து, (செப்டம்பர் 9-ம் தேதி) மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது. இதற்கு முன்னதாக, (செப்டம்பர் 5-ம் தேதி)விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…