அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.? “AK61” படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.!
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.!
படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் கூட டைட்டிலுடன் அறிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது தான் அப்டேட் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்றால் “AK 61” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை டைட்டிலுடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட, நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் “AK61” படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை தான் வெளியாகிறது என கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. நாளை வெளியாகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.