ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… இன்ஸ்டாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்தின் மனைவி.!
நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களும் இல்லை. அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக கூறிவருகிறார். அவர்களுடைய ரசிகர்களுக்கு கவலை என்னவென்றால் அஜித் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்சிக்கு கூட வரவேண்டாம், ஆனால் மற்ற நடிகர்களை போல சமூக வலைத்தளங்களிலாவது வருவாரா என்பது தான்.
இந்த நிலையில், அவர்களது கவலை போக்கும் விதமாக நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் தற்போது இன்ஸ்டாகிராமில் திடீர் என்ட்ரி கொடுத்துள்ளார். எனவே இனிமேல், அஜித் பற்றிய எந்த தகவல் வேணுமென்றாலும், அல்லது அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் வந்தாலும் அதனை ஷாலினியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுவிடுவார்.
இதையும் படியுங்களேன்- இன்ஸ்டாகிராமில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷாலினி அஜித்.! ரசிகர்கள் கொடுத்த இமாலய வரவேற்பு.!
ஷாலினி இன்ஸ்டாகிராம் இணைந்தவுடனே லியோனில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட சூப்பரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அடுத்ததாக அஜித் சார் எப்போது இன்ஸ்டாவில் இணைவார்..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் இணைய தொடங்கிய சில நாட்களிலே 1 லட்சம் ஃபாலோயர்களை மேல் நெருங்கியுள்ளார். நடிகை ஷாலினி அஜித்தை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram