ஒரு போன் கால் போதும்…விஜய் உடனே உதவி செய்வார்…மாஸ்டர் லாரன்ஸ் நெகிழ்ச்சி பேச்சு.!
நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். பல பேட்டிகளில் விஜய் பற்றி ராகவா லாரன்ஸ் பல நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொள்வது உண்டு.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் விஜய் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “சினிமாத்துறையில் இருக்கும் நண்பர் என்றால் விஜய் மட்டும் தான். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
என்னுடைய தொண்டு நிறுவனத்திற்கோ இல்லை குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி தேவை என்றோ அவருக்கு ஒரு போன் கால் செய்தால் போதும், அனைத்தும் வந்துவிடும். குறிப்பாக அவர் நடித்த படங்கள் வெளி வந்தால் குழந்தைகள் பார்க்க ஆசைப்படுவார்கள் உடனே விஜய்க்கு கால் செய்தால் குழந்தைகளுக்காக ஒரு ஷோவ் ஏற்பாடு செய்து தந்துவிடுவார்” என பேசியுள்ளார்.
மேலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியான ருத்ரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.