இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் சிவகார்திகேயன் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று சரியாக காரணம் தெரியவில்லை. ஒரு பேட்டியில் இருவருக்கும் என்ன பிரச்சனை உள்ளது என்பதை இமான் காரணத்தை தெரிவிக்காமல் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்ற மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு டி.இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசினார். சிவகார்த்திகேயன் நானும் இமானும் பிரிய கூடாது என்று விரும்பியதாகவும் இமான் நான் வேண்டாம் என்கிற முடிவில் இருந்ததாகவும் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிவார்த்திகேயனை பற்றி இப்படி பேசுகிறார் என மோனிகா கூறியிருந்தார்.
இதனையடுத்து, இமான் – மோனிகா விவாகரத்து பிரச்சனையில் தான் சிவகார்த்திகேயன் எதோ துரோகம் செய்துவிட்டதாக பலரும் தகவலை கிளப்ப தொடங்கினார்கள். இதனையடுத்து, இதில் புதிய திருப்பமாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய முதல் மனைவியான மோனிகாவை கடந்த 2020-ஆம் ஆண்டு தான் விவாகரத்து செய்தார்.
இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!
அதன்பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். எனவே, இதனை வைத்து பார்க்கையில், சிவகார்த்திகேயன் துரோகம் செய்தததாக கூறிய காரணத்தால் விவாகரத்து ஆகி இருந்த எப்டி இமான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், டி இமான் பிரச்சனைக்கான காரணத்தை இன்னும் தெரிவிக்கவில்லை. அதைப்போலவே, சிவகார்த்திகேயனும் இதனை பற்றி பேசாமல் இருக்கிறார். எனவே, சிவகார்த்திகேயன் தனது மௌனத்தை கலைத்து இந்த பிரச்சனை பற்றி விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…