நடிகை ப்ரியா பவானிக்கு முத்தம் கொடுத்த குரங்கு வைரலாகும் புகைப்படம்
சமீபத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியா பவானி அங்கிருந்த குரங்குகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரா மில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டி.வியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல்” வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.இந்த சீரியல் மூலமாக வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார்.சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய “மேயாத மான்” திரைப்படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” படத்திலும் நடித்துள்ளார். தற்போது ப்ரியா பவானி சங்கர் “குருதி ஆட்டம்” , ” மான்ஸ்டர் ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியா பவானி அங்கிருந்த குரங்குகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரா மில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ப்ரியா பவானி கன்னத்தில் இரண்டு குரங்குகள் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் இடம் பெற்றுள்ளது.
https://www.instagram.com/p/BvqUFxKDl9R/?utm_source=ig_web_copy_link