தமிழ் திரையுலகில் முக்கிய ஜோடிகளாக பார்க்கப்படும் சினேகா-பிரசன்னா ஆகிய இருவரும், ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பின்னர் இரு காதலிக்க தொடங்கினர். இருவரின் குடும்பத்தினரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு, இப்பொது அவர்களுக்கு விஹான் மகனும் ஆதியன்தா மகளும் உள்ளனர்.
தற்போது, சினேகா மற்றும் பிரசன்னாவுக்கும் திருமணமாகி 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. மேலும், அந்நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இருவரின் காதல் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், இப்போது தங்கள் 11வது திருமண நாளை கொண்டாடிய இந்த ஜோடி, கடந்த சில மாதங்களாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு பிரசன்னா தற்போது முற்று புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில உணர்ச்சியான குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அதில், ஏய் போண்டாட்டி…. ‘இந்த சிறப்பு நாளில், நான் சொல்ல விரும்புகிறேன், வாழ்க்கையின் திருப்பங்கள் மற்றும் திருப்பங்களில் உங்கள் கையைப் பிடித்துக் கொள்வது, நாம் என்ன செய்தாலும் நான் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று பிரசன்னா சினேகாவுக்கு ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை எழுதியுள்ளார்.
நான் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டேன், அது உண்மைதான், ஆனால் என் பக்கத்தில் உன்னுடன், என்னால் எதுவும் செய்ய முடியாது, உங்கள் அன்பு இருட்டில் என்னை வழிநடத்தும் ஒரு வெளிச்சம், உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என் துணையாக, என் தீப்பொறி என்று குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…