கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்? நாளை முடிவு!
, நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், அவரது நிறுவன தயாரிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை மதியத்திற்குள் வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
அதன்படி, நாளைக்குள் மீதமுள்ள தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025