ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் “இறைவன்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஹ்மத் இயக்கிய, இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
ட்ரைலரை வைத்து பார்க்கும்பொழுது, இறைவன் திரைப்படம் பெண்களை வெல்வேறு விதமாக கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கில்லர் பற்றி விவரிக்கும் திரில்லர் படமாகும். வில்லன் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கொலைகளை விசாரிக்கும் தீவிர போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார்.
பேஷன் ஸ்டுடியோவின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹரி கே வேதாந்தின் ஒளிப்பதிவு மற்றும் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார். ஆகஸ்ட் 25-ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பட ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்த ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சைரன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது, சைரன் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம், நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…