ஒரு சூறாவளி கிளம்பியதே….வெறித்தனமாக Work Out செய்யும் யோகி பாபு – வைரலாகும் வீடியோ!!
காமெடி நடிகர் யோகி பாபு தற்போது பல பெரிய படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது ஏதேனும் வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கிரிக்கெட் வீரர் தோனி தனக்கு பேட் -டை பரிசாக கொடுத்த வீடியோவை வெளியீட்டு இருந்தார்.
View this post on Instagram
அந்த வீடியோவை தொடர்ந்து, தற்போது யோகி பாபு ஜிம்மில் மிகவும் கடினமாக பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் யோகி பாபு மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.
வெறித்தமனாக உடற்பயிற்சி செய்யும் அந்த வீடியோவை பார்த்த பலரும் அண்ணா வேற லெவல் அண்ணா எனவும், ஃபிட் ஆகி வா தலைவா என்றும், கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். யோகி பாபு இப்படி வெறித்தனமாக பயிற்சி செய்வதை பார்த்தால் கண்டிப்பாக எதோ ஒரு பெரிய படத்திற்கு தான் என தெரிகிறது.
View this post on Instagram
மேலும் நடிகர் யோகி பாபு தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் 2, கசேதன் கடவுலடா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.