தமிழ் தெலுங்கில் அமோக வரவேற்பு…வசூலில் மாஸ் காட்டிய பிச்சைக்காரன் 2.!!
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “பிச்சைக்காரன் 2”. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார்.
படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளது. நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழில் எந்த அளவிற்கு படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதோ, அதே அளவிற்கு தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Pichaikaaran2 very good opening day 1????
Day 2 also very good hold
Both in Tamil & Telugu career best opening for Vijay Antony ???????? pic.twitter.com/n2FRTtCyXa
— Karthik Ravivarma (@Karthikravivarm) May 20, 2023
#Pichaikaran2/ #Bichhagadu2 @vijayantony ‘s thriller takes an excellent opening in both #TN and #Telugu states! @mrsvijayantony pic.twitter.com/XlaccZnENq
— Sreedhar Pillai (@sri50) May 20, 2023
. @vijayantony ‘s #Pichaikaran2 takes an excellent opening in both TN and Telugu states.. @mrsvijayantony pic.twitter.com/e4M5ptsSAG
— Ramesh Bala (@rameshlaus) May 20, 2023