இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் பாடலான “ஒன்னோட நடந்தா” பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மொத்த பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சியான இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த பட குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி , விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக விழாவிற்கு பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனெனில், இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் நெருங்கிய நண்பர்கள் அது மட்டும் இன்றி இளையராஜாவின் தீவிர ரசிகரும் தனுஷ். எனவே நட்புக்காக அவர் இசை வெளியீட்டு விழா விழாவிற்கு அவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் தங்கை பவானி ஸ் இந்த படத்தில் நடித்து வருவதாழும், அவரும் இசையமைப்பாளர் வெற்றிமாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஜிவியும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தர அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…