ஜஸ்டின் பீபர் : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். இதனையடுத்து, திருமணத்திற்கு முந்தய விழாக்கள் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் சங்கீத நிகழ்ச்சியில் பாட்டு பாடி அனைவருடைய மனதையும் மயக்கும் வகையில், பாடல்களை பாட பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாட இருக்கிறார்.
இதற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) அதிகாலை அவர் மும்பை வந்தார். ஜூலை 5, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் சங்கீத விழாவில் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடவுள்ளதாக தெரிகிறது. திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பலரும் வருகை தருவதன் காரணமாக இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவரை அம்பானி குடும்பம் அழைத்துள்ளதாக தெரிகிறது. அவர் வந்து இருக்கும் தகவல் ஒரு பக்கம் ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், இந்த நிகழ்ச்சிக்காக அவர் வருவதற்கு சம்பளமாக பெற்ற தொகை பற்றிய விவரமும் ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த விழாவில் கலந்துகொண்டு பாடுவதற்காக பாடகர் ஜஸ்டின் பீபர் 83 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, நடைபெற்ற திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரிஹானா, ரூ. 74 கோடி சம்பளமும், கேட்டி பெர்ரி 45 கோடி ரூபாய் சம்பளமும் வாங்கி இருந்த நிலையில், அவர்களை மிஞ்சும் அளவிற்கு ஜஸ்டின் பீபர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…