கோட் : பொதுவாகவே விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் தமிழகத்தை போலவே கேரளாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுவது உண்டு. ஏனென்றால், கேரளாவில் விஜய் படத்திற்கு அந்த அளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக விஜய் படங்கள் வெளியாவதற்கு திரையரங்குகளில் வெளியீட்டு உரிமை பெரிய அளவில் விற்பனை ஆகிவிடும்.
அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் கேரளாவில் கிட்டத்தட்ட 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை ஆன தமிழ்ப்படம் என்ற சாதனையை படைத்து இருந்தது. அதனை தொடர்நது அவர் தற்போது நடித்து முடித்துள்ள கோட் படம் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
அதே சமயம் இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் சூர்யா நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் கங்குவா படமும் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை ஆகும் கிட்டதட்ட கோட் படத்தின் அளவுக்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கங்குவா படத்தினை விட கோட் படம் அதிக விலைக்கு விற்பனை ஆகி இருக்கிறது.
அதன்படி, கங்குவா படத்தின் கேரள திரையரங்கு வெளியீட்டு உரிமையை கோகுலம் நிறுவனம் 10 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, கோட் திரைப்படத்தினையும், கோகுலம் நிறுவனம் தான் கிட்டத்தட்ட 17 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை ஆகி இருந்த லியோ சாதனையையும் கோட் படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி 38 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…