சாதி படங்கள் மூலம் 3 கோடிக்கு சொகுசு கார்.? பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர்.!
இயக்குனர் பா.ராஞ்சித் சாதிப் படங்களைத் எடுப்பதாகவும், இதன் மூலம் பணம் சம்பாதித்து கார் வாங்கினார் என ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான பிரவீன் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பா.ரஞ்சித் சமீபத்தில் பெரிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரின் விலை 2-3 கோடி ரூபாய் என்று நான் கேள்விப்பட்டேன்.
அவர் கார் வாங்கியது இது நல்ல விஷயம், அவரை வாழ விடுங்கள். ஆனால், நான் சொல்ல வருவது ஒன்னு தான் அது என்னவென்றால், நல்ல படங்களை எடுங்கள் என்பதை தான். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் புதிய ஆடி கார் வாங்கினார். அவரைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் நல்ல படங்களை எடுக்கிறார் சம்பாதித்து வாழ்கிறார்.
ஆனால், பா ரஞ்சித் சாதிப் படங்களைத் எடுக்கிறார். இதன் மூலம் நீங்கள் நன்றாக சம்பாதிக்கிறீர்கள். சாதி படம் எடுத்துவிட்டு சமூகத்தை மாற்ற வந்தீர்கள் என்று பொய் சொல்லாதீர்கள். அது உங்கள் நோக்கமாக இருந்தால், படம் எடுத்துவிட்டு அதில் வரும் பணத்தை நான் 5 கோடி சம்பாதித்தேன், நான் மக்களுக்கு 4.5 கோடி நன்கொடை தருகிறேன் என கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
அப்படி நீங்கள் பெரிய அளவில் உதவி செய்தால் நீங்கள் சாதி சார்ந்த படங்களை எடுக்கலாம், அதை நான் விமர்சிக்க மாட்டேன், அதைப்பற்றி நான் வாயையே திறக்கமாட்டேன். ஆனால், நீங்கள் உங்கள் சம்பளத்திற்கு சாதிப் படங்களை எடுத்தால், அது சரியில்லை. என்னைப்பொறுத்தவரை அது மிகவும் தவறு” எனவும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இயக்குனர் பிரவீன் காந்தி ராட்சகன், புலிப்பார்வை, துள்ளல், ஜோடி, உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.