SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார்.
நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுக்கு வில்லனாக சியான் 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல இந்தியன் 2, கேம்செஞ்சர் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஒரு படத்திலும் நடிக்க எஸ்.ஜே. சூர்யா முடிவு செய்துள்ளாராம். அந்த திரைப்படத்தை ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். ஏற்கனவே, இவருடைய இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால், இன்னும் வரை படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க முக்கிய காரணமே கதையை கேட்டு மிரண்டது தானாம். பாக்கியராஜ் கண்ணன் அந்த அளவிற்கு ஒரு மிரட்டலான கதையை எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறி அவரையே மிரள வைத்துவிட்டாராம். கதையை கேட்டு மிகவும் பிடித்தவுடன் உடனடியாக படம் செய்யலாம் என்று எஸ்.ஜே.சூர்யா கால்ஷீட் கொடுத்துள்ளாராம். விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெலுங்கிலும் நானிக்கு வில்லனாக ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு கூட படத்தின் சின்ன டீசர் வீடியோ வெளியாகி இருந்தது. அதிலும் போலீஸ் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…