“வாரிசு” படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா..?
அடுத்ததாக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் “வாரிசு” திரைப்படம் என கூறலாம். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படம் விஜய் படம் என்பதாலும், படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருவதாலும் படத்தின் பாடல்கள் மீதும் பிண்ணனி இசை மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
எனவே, தற்போது வாரிசு படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டி சீரிஸ் (T-Series) வாங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் 10 கோடி கொடுத்து வாரிசு படத்தின் “வாரிசு” படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகலாம் எனவும் டீசர் அல்லது டிரைலர் வரும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதற்கான அப்டேட்டையும் படக்குழு விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.
Happy to be associated with @TSeries to bring the music of #Varisu to you ????#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman #BhushanKumar #VarisuPongal pic.twitter.com/nHmn8OB97V
— Sri Venkateswara Creations (@SVC_official) October 29, 2022