80 காலகட்டத்தில் நடிகர் மோகனுக்கு ஜோடியாக ‘தென்றலே என்னை தோடு’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ, சத்யராஜுடன் ‘விடிஞ்சா கல்யாணம்’, கார்த்திக் மற்றும் முரளிக்கு ஜோடியாக நடித்த ‘வண்ண கனவுகள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அப்போது முன்னணி நாயகியாக வந்தார்.
சில நடிகைகள் தனக்கு பட வாய்ப்பு வரவில்லை என்றால், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், ஜெயஸ்ரீ அப்போதைய காலத்தில் பிரபலமாக இருந்தாலும் நடிப்பு வாய்ப்புகள் இருந்தாலும், திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி செட்டில் ஆகிவிட்டார். அவர் அமெரிககா சென்று பல வருடங்கள் ஆகிறது, அங்குள்ள ஐடி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் சமூகத்தில் உள்ள வசதியற்றவர்களுக்கு சாப்பாடு கொடுத்து சில உதிவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட ‘மணல் கயிறு 2’ என்ற திரைப்படத்தில் எஸ்.வி சேகர் மற்றும் விசு உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில், இவர் சினிமாவில் பிரபலமாக உலா வந்தாலும், திரைப்படங்களில் எந்த ஒரு கவர்ச்சி காட்சிகளிலும் நடிக்க மாட்டார் என்று நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், ஐயர் வீட்டு பெண்ணாக இருந்தாலும், கவர்ச்சி காட்டுவதற்கு மறுத்துவிட்டார்.
குறிப்பாக, நெருக்கமான காட்சி, படுக்கை காட்சி, முத்த காட்சி ஆகியவற்றை தவிர்த்துவிட்டார் என்றும், அனாலும் நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் அவரை திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அப்பா – அம்மா பார்ப்தற்காக 2 வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து போவதாக பகிர்ந்து கொண்டார்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…