தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இவரது திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் பரவுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் விரைவில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து அதற்கு சமீபத்திய ஒரு பேட்டியின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- வாவ் 40 வயசுல இப்படி ஒரு அழகா.. டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் புன்னகை அரசி சினேகா.!
இது தொடர்பாக பேசிய அவர் ” நான் ஒருவரை காதலித்தேன் சில காரணங்களால் எங்களது காதல் முறிந்துவிட்டது. அதிலிருந்து விடுபட நான் கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது தெரியாது” என்று கூறியுள்ளார்.
நடிகை ரெஜினா தற்போது கருங்காபியம், சூர்ப்பனகா, நேனா நா உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துளளார். இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…