கேன்களின் மூடியால் செய்யப்பட்ட ஆடை..மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஜொலித்த பிரபல நடிகை!
தாய்லாந்து நடிகை அன்னா சுவாங்கம் (Anna Sueangam-iam) மிஸ் யுனிவர்ஸ் 2023 பூர்வாங்க போட்டியின் போது, நேற்று வியாழன் அன்று குடிநீர் கேன்களின் மூடியால் செய்யப்பட்ட பளபளப்பான உடை அணிந்து கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
தனது பெற்றோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பளபளக்கும் அப்சைக்கிள் கவுனை அணிந்து கொண்டு வந்துள்ள அன்னா சுவாங்கம் (Anna Sueangam-iam) – வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடையை அவர் எதற்காக அணிந்து வந்தார் என்றால், நடிகை அன்னா சுவாங்கம் (Anna Sueangam-iam) அப்பா குப்பை சேகரிப்பவர், அம்மா தெருவை துப்புரவு செய்பவர். எனவே அவர்களுடைய பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையில் இதைப்போல ஒரு உடை அணிந்து கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram